Last Updated : 16 Mar, 2018 11:24 AM

 

Published : 16 Mar 2018 11:24 AM
Last Updated : 16 Mar 2018 11:24 AM

விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்த சூர்யா

இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார் சூர்யா.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்தார் சூர்யா. இந்தப் படம், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி ரிலீஸானது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

ஒரு படம் வெற்றி பெற்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளரோ அல்லது நடிகரோ, சம்பந்தப்பட்ட இயக்குநருக்கு கார் பரிசளிப்பது கோடம்பாக்கத்தில் வழக்கமாகி வருகிறது. சிலர், தங்கச் சங்கிலி, மோதிரம் கூட தருவர்.

அந்த வகையில், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு, புத்தம்புதிய சிவப்பு நிற டொயாட்டா காரைப் பரிசாக அளித்துள்ளார் சூர்யா. ஏற்கெனவே ‘எஸ் 3’ படத்தை இயக்கிய ஹரிக்கும் காரைப் பரிசாக அளித்துள்ளார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x