Last Updated : 18 Mar, 2018 01:29 PM

 

Published : 18 Mar 2018 01:29 PM
Last Updated : 18 Mar 2018 01:29 PM

சிவகார்த்திகேயன் படத்தை இயக்குகிறார் எம்.ராஜேஷ்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் ஒரு படத்தை இயக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது ‘சீம ராஜா’ படத்தில் நடித்து வருகிறார். பொன்ராம் இயக்கிவரும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். நெப்போலியன், சூரி, சிம்ரன், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

ஆர்.டி.ராஜாவின் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘சீம ராஜா’ படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக முடிவு செய்திருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால், அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். விக்னேஷ் சிவனுக்குப் பதில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் சிவகார்த்திகேயன் என்கிறார்கள்.

எம்.ராஜேஷ் தற்போது சந்தானத்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அந்தப் படம் முடிந்தபிறகு சிவகார்த்திகேயனை இயக்குவார் என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x