Last Updated : 23 Mar, 2018 01:24 PM

 

Published : 23 Mar 2018 01:24 PM
Last Updated : 23 Mar 2018 01:24 PM

‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் விஜய் சேதுபதி

‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘டிராஃபிக் ராமசாமி’ என்ற படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் விக்கி இயக்கிவரும் இந்தப் படத்தில், டிராஃபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.

மேலும், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, சீமான், குஷ்பு, மனோபாலா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நடிகர் விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்கிறார்கள். சற்றே நீளமான கெஸ்ட் ரோலில் அவர் நடிக்கிறாராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x