Last Updated : 19 Mar, 2018 12:17 PM

 

Published : 19 Mar 2018 12:17 PM
Last Updated : 19 Mar 2018 12:17 PM

‘புரூஸ்லீ’ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் திருமணம்: திருச்சியில் இன்று நடைபெற்றது

‘புரூஸ்லீ’ படத்தின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜுக்கு திருச்சியில் இன்று திருமணம் நடைபெற்றது.

இயக்குநர் பாண்டிராஜிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் பிரசாந்த் பாண்டியராஜ். ‘புரூஸ்லீ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், கிர்த்தி கர்பந்தா ஹீரோயினாக நடித்தார். மேலும், பால சரவணன், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

பிரசாந்த் பாண்டியராஜுக்கும், சங்கீதாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. திருச்சியில் உள்ள எஸ்.எம்.ஆர். மஹாலில் (பழைய அலங்கார் தியேட்டர்) இந்த திருமணம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x