Last Updated : 29 Sep, 2014 10:35 AM

 

Published : 29 Sep 2014 10:35 AM
Last Updated : 29 Sep 2014 10:35 AM

மெட்ராஸ் படத்தின் இசை காப்பியா? : சந்தோஷ் நாராயணன் விளக்கம்

'மெட்ராஸ்' படத்தின் இசை 'இன்செப்ஷன்' (Inception) படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று பரவும் செய்திக்கு, படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி, கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'மெட்ராஸ்' சமீபத்தில் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் பின்னணி இசையில் வரும் சிலவற்றை சந்தோஷ் நாராயணன், ஹன்ஸ் சிம்மர் (hans zimmer) இசையமைத்த இன்செப்ஷன் (Inception)படத்தில் இருந்து காப்பியடித்து இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதற்கு சந்தோஷ் நாராயணன், "ஹன்ஸ் சிம்மர் இசையமைத்த இன்செப்ஷன் படத்தின் டைம் (TIME) இசையைப் போலவே 'மெட்ராஸ்' படத்தில் சில இசைக் கோர்ப்புகள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அவ்வாறு கூறிய இசை வல்லுநர்களுக்காக விரைவில் 'மெட்ராஸ்' படத்திற்காக நான் உருவாக்கிய இசையை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய இருக்கிறேன்" என்று தன் ஃபேஸ்புக் தளத்தில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து 'மெட்ராஸ்' படத்தில் இடம்பெற்ற KILLED FROM INSIDE என்ற பெயரில் பின்னணி இசையினை வெளியிட்டு, "'மெட்ராஸ்' படத்தின் பின்னணி இசையினை சொன்னது போலவே வெளியிட்டு விட்டேன். தற்போது படத்தின் பின்னணி இசை உள்ளிட்டவை சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக ஆகியிருப்பது புத்துணர்ச்சியாக இருக்கிறது.

இசையை காப்பியடித்திருக்கிறேன் என்ற செய்திக்கு விளக்கம் அளிக்கவே இதனை பதிவேற்றி இருக்கிறேன். எனது பணிகள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் விளக்கம் அளிக்க காத்திருக்கிறேன்.

தொடர்ச்சியாக எனது படங்களுக்கு அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. விரைவில் எனது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்களை ஃபேஸ்புக்கில் அறிவிக்கிறேன்" என்று சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x