Published : 25 May 2019 17:36 pm

Updated : 25 May 2019 17:36 pm

 

Published : 25 May 2019 05:36 PM
Last Updated : 25 May 2019 05:36 PM

தியேட்டர்களில் ‘என்.ஜி.கே.’ படத்துடன் ஒளிபரப்பாகும் ‘கைதி’ டீஸர்

சூர்யாவின் ‘என்.ஜி.கே.’ படத்துடன், கார்த்தியின் ‘கைதி’ டீஸர் ஒளிபரப்பாகவுள்ளது.

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கைதி’. ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.


இந்தப் படத்தில் ஹீரோயின் கிடையாது. அத்துடன், ஒரே இரவில் கதை நடப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக 61 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். நரேன், பொன்வண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கைதி’ படத்தின் டீஸர், வருகிற 30-ம் தேதி (வியாழக்கிழமை) ரிலீஸாகிறது. எனவே, இந்த டீஸரை சூர்யாவின் ‘என்.ஜி.கே.’ படத்தின் இடைவேளையின்போது திரையரங்குகளில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘என்.ஜி.கே’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. பொலிட்டிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழில் உருவாகியுள்ள இந்தப் படம், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. சூர்யா - செல்வராகவன் - யுவன் கூட்டணி என்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

தவறவிடாதீர்!

    என்.ஜி.கே.என்.ஜி.கே. ரிலீஸ்கைதிகைதி டீஸர்என்.ஜி.கே. கைதி டீஸர்சூர்யாகார்த்திதமிழ் சினிமாசெல்வராகவன்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x