Published : 03 May 2019 08:04 AM
Last Updated : 03 May 2019 08:04 AM

கார்ப்பரேட் டு கலகலப்பு

புதுயுகம் சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘ஃபர்ஸ்ட் ஃப்ரேம்’ நிகழ்ச்சி வழியே கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரைக்கும் கரைத்து குடித்து விடுகிறார் தொகுப்பாளினி பவித்ரா.

‘‘இந்த நிகழ்ச்சி அரை மணிநேரம்தான். ஆனால், கோலிவுட், சமூகதளம், அக்கம்பக்கம், டிரெய்லர் டைம் என 4 பகுதிகளாக ஒளிபரப்பாகும். தமிழ் சினிமா முதல் ஹிந்தி சினிமா வரைக்கும் அப்பப்போ நடக்கிற பொழுதுபோக்கு அம்சங்களை இந்த நிகழ்ச்சி பிரதிபலிக்கும். ரீமேக், பார்ட் 2 என இன்றைக்கு சினிமாவுல நடக்கிற அத்தனை விஷயங்களையும் கலகலப்பாக, எளிதா மக்கள்கிட்ட சேர்க்கிற வேலையைத்தான் செய்றேன்.  2018-ல் கல்லூரி படிப்பை முடிச்சிட்டு 3 மாதம் கார்ப்பரேட் கம்பெனி வேலை. அங்கே இனி உட்காரவே முடியாது என்ற நிலை வந்த அடுத்த நாள் புதுயுகம் சேனலில் ஆடிஷன். வேலையும் கிடைத்தது. இப்போ சமர்த்தாக நிகழ்ச்சியை வழங்கிட்டு வர்றேன்’’ என்கிறார் பவித்ரா உற்சாகமாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x