Last Updated : 08 May, 2019 04:42 PM

 

Published : 08 May 2019 04:42 PM
Last Updated : 08 May 2019 04:42 PM

குதிரைக்கு குரல் கொடுக்கும் ‘டைட்டானிக்’ நாயகி

உலகப் புகழ்பெற்ற குழந்தைகள் க்ளாஸிக் நாவலான ‘ப்ளாக் பியூட்டி’, ஹாலிவுட்டில் பலமுறை படமாக்கப்பட்டுள்ளது. தற்போது தயாராகிவரும் ‘ப்ளாக் பியூட்டி’ திரைப்படத்தில், குதிரைக்கு டப்பிங் பேசுகிறார் ‘டைட்டானிக்’ நாயகி.

அன்னா அன்னா செவெல் என்பவர் 1877-ல் எழுதிய ‘ப்ளாக் பியூட்டி’ நாவல், பெஸ்ட் செல்லிங் புத்தகங்கள் வரிசையில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நாவல், பல்வேறு காலகட்டங்களில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பிரதிகளை விற்று, நூற்றுக்கணக்கான பதிப்புகளைக் கண்டுள்ளது.

இந்நாவல், திரைப்படமாகவும் பலமுறை எடுக்கப்பட்டு வெற்றியடைந்துள்ளது. அவ்வரிசையில், 1994-ல் வெளிவந்த ‘ப்ளாக் பியூட்டி’ திரைப்படம் முக்கியமான படைப்பு என்று கூறப்படுகிறது. அதில், ஆலன் கம்மிங் குதிரைக்கு குரல் கொடுத்தார்.

‘ப்ளாக் பியூட்டி’, ஒரு காட்டுக் குதிரையின் கதை என்றாலும், அக்குதிரையுடன் பெற்றோர் மரணத்துக்குப் பிறகு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் 17 வயது பெண்ணின் கதையையும் கூறுகிறது. வீரதீர செயல்களில் முக்கியப் பங்குவகிக்கும் இக்குதிரை,  நாவலின் ஒருகட்டத்தில் வண்டிக் குதிரையாக மாறிவிடும் அவலம் நேர்கிறது.

ஆனால், இப்புதிய படத்திலோ, வயோமிங் சமவெளியில் சுற்றித் திரியும் அடங்காத காட்டு மிருகமாகவே கடைசிவரை சித்தரிக்கப்படுகிறது. மக்கன்ஸி ஃபாய், இக்கதையில் வரும் 17 வயதுப் பெண்ணாக நடிக்கிறார்.

இப்படத்தில், குதிரையின் உள்மன எண்ணங்களை, புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லெட் குரல் வெளிப்படுத்துகிறது.

இத்திரைப்படத்தை ஜெர்மி போல்ட் மற்றும் ராபர்ட் குல்சர் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அடலசென்ஸ், டிசர்ட்டேடு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பெண் இயக்குநர் ஆஷ்லே அவிஸ் இயக்குகிறார்.

கேட் வின்ஸ்லெட், 1997-ல் ‘டைட்டானிக்’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x