Published : 26 May 2019 02:27 PM
Last Updated : 26 May 2019 02:27 PM

ஜெய் ஜோடியாக 2 ஹீரோயின்கள்

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் படத்தில், ஜெய் ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘டூரிங் டாக்கீஸ்’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்த இந்தப் படத்தில், அவரே ஹீரோவாகவும் நடித்தார். அபி சரவணன், மனோபாலா, ஏ.வெங்கடேஷ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படம், 2015-ம் ஆண்டு வெளியானது.

‘டூரிங் டாக்கீஸ்’ படத்தைத் தொடர்ந்து ‘நையப்புடை’, ‘கொடி’, ‘டிராஃபிக் ராமசாமி’, ‘ஆருத்ரா’ ஆகிய படங்களில் நடித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதில், ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில், டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் படத்தின் நாயகனாக நடித்தார்.

இந்நிலையில், சில வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் படம் இயக்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்தப் படத்தில், ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். ஜெய் ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா, அதுல்யா ரவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரிக்கிறார்.

ஜெய் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘நீயா 2’. இந்தப் படத்திலும் ஜெய் ஜோடியாக கேத்ரின் தெரேசா, ராய் லட்சுமி என இரண்டு நடிகைகள் நடித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x