Published : 03 May 2019 08:05 AM
Last Updated : 03 May 2019 08:05 AM

சன் டிவி புதிய தொடரில் ராதிகா!

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘சந்திரகுமாரி’ நெடுந்தொடரில், தான் ஏற்று நடித்த கதாபாத்திரப் பொறுப்பை விஜி சந்திரசேகருக்கு அளித்துவிட்டு சினிமாவில் பிஸியாகியுள்ளார் ராதிகா. இதுபற்றி விசாரித்தபோது, ராதிகா தரப்பில் கூறப்படுவதாவது:

ராடன் நிறுவனம் அதிக செலவில் உருவாக்கிவரும் தொடர் ‘சந்திரகுமாரி’. இதுபோன்ற தொடரை முழு அர்ப்பணிப்போடு செய்தால்தான் சிறப்பாக இருக்கும் என்பது ராதிகாவின் விருப்பம். இந்த நேரத்தில் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம் தொடங்கி, அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் படம், கன்னடப் படம் என ராதிகா பிஸியாகிவிட்டார். தவிர, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடிக்க உள்ளார். தற்போதுகூட மோகன்லால் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்துக்காக எர்ணாகுளம் பகுதியில் படப்பிடிப்பில் இருக்கிறார். தன் கதாபாத்திரத்தை விஜி சந்திரசேகரிடம் கொடுத்ததற்கு இதுதான் காரணம்.

சன் டிவியில் ஜூலை இறுதியில் புதிய தொடர் ஒன்றை தயாரித்து நடிக்கவும் ராதிகா திட்டமிட்டுள்ளார். அது பிரைம் டைம் தொடராக இரவு 9.30-க்கு ஒளிபரப்பாகும். இவ்வாறு ராதிகா தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஜீ தமிழ் சேனலில் நடிகைகள் சுதா சந்திரன், லைலா, சினேகா நடுவர்களாக பங்கேற்று நடத்தும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ ஜூனியர்ஸ் இறுதிச்சுற்று வரும் ஞாயிறன்று ஒளிபரப்பாகிறது. அதில் ராதிகா கலந்துகொண்டு, வெற்றியாளருக்கு பரிசு வழங்கு கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x