Published : 06 May 2019 08:19 AM
Last Updated : 06 May 2019 08:19 AM

சர்வதேச விழாவில் 3 தமிழ் படங்கள்

பெங்களூருவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், திரையிடப்பட்ட பெருமையோடு, விருதையும் பெற்றிருக்கிறது ‘நெடுநல்வாடை’ திரைப்படம்.

இன்னவேடிவ் ஃபிலிம் அகாடமி (Innovative Film Acadamy - IFA)  சார்பில் 26 நாடுகளில் இருந்து 106 திரைப்படங்கள் பங்கேற்ற சர்வதேச திரைப்பட விழா, பெங்களூருவில் சமீபத்தில் நடந்தது. இதில், தமிழ்த் திரையுலகில் இருந்து ‘பேரன்பு’, ‘நெடுநல்வாடை’, ‘தடம்’ ஆகிய 3 படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டுள்ளன.

அறிமுக இயக்குநர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் ‘பூ’ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘நெடுநல்வாடை’ திரைப்படம், கல்லூரியில் ஒன்றாக படித்த  50 பேர் இணைந்து தயாரித்த ‘கிரவுட் ஃபண்டிங் (CROWD FUNDING) திரைப்படம் என்ற பெருமையோடு அங்கு திரையிடப்பட்டு, விருதையும் பெற்றுள்ளது.

இந்த திரையிடல் மற்றும் விருது குறித்து இயக்குநர் செல்வக்கண்ணன் கூறும்போது, ‘‘பல நாடுகள், மொழிகளில் இருந்து வந்திருக்கும் முக்கிய இயக்குநர்களின் படைப்புகளின் முன்பாக புதியவர்களான நாங்களும் நின்றது, எங்களுக்கு கிடைத்த பெருமை!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x