Last Updated : 22 Apr, 2019 05:07 PM

 

Published : 22 Apr 2019 05:07 PM
Last Updated : 22 Apr 2019 05:07 PM

சிவா இயக்கத்தில் சூர்யா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், அதனை தயாரிக்கவுள்ளதாகவும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. ஜனவரி 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்துடன் வெளியானது. இப்படம் தமிழகத்தில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து சிவா யாரை இயக்கவுள்ளார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. இந்நிலையில், சூர்யா நடிக்கும் 39-வது படம் குறித்த அறிவிப்பு இன்று (ஏப்ரல் 22) மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என்று ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

அதன்படி, சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், அப்படத்தை நாங்கள் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனால், சூர்யா ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். 'சிறுத்தை' படம் இயக்கும் போதே, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் 2 படங்கள் இயக்குவதாக தான் சிவாவை ஒப்பந்தம் செய்தார்கள். அந்த ஒப்பந்தத்தின்படி ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் சூர்யா நடிக்கும் படத்தை சிவா இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூர்யா படத்தை முடித்துவிட்டு, மீண்டும் அஜித் நடிக்கவுள்ள படத்தை சிவா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா படம் முடிவடைந்தவுடன், அஜித்தை இயக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x