Last Updated : 12 Apr, 2019 06:06 PM

 

Published : 12 Apr 2019 06:06 PM
Last Updated : 12 Apr 2019 06:06 PM

வசந்தபாலன் இயக்கத்தில் விஷ்ணு விஷால்

'ஜெயில்' படத்தைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ், ராதிகா சரத்குமார், , உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. தற்போது படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளில் நடைபெற்று வருகிறது. ஜூனில் வெளியிடலாம் என்று படக்குழு தயாரித்து வருகிறது.

இந்நிலையில், வசந்தபாலன் தனது படத்துக்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். இதில் நடிக்க விஷ்ணு விஷால் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்த போது, விஷ்ணு விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.

விரைவில் லைகா நிறுவனம் - வசந்தபாலன் - விஷ்ணு விஷால் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x