Published : 09 Apr 2019 01:02 PM
Last Updated : 09 Apr 2019 01:02 PM

மீண்டும் ஒரு ஜெ. பயோபிக்: சசிலலிதா பெயரில் உருவாகிறது!

அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். ஜெயலலிதாவின் பிறந்தநாளான கடந்த பிப்ரவரி 24 அன்று இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது தவிர இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் ’தி அயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இயக்குனர் பாரதிராஜா ஜெ. வாழ்க்கையை படமாக்க முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இவர், 'ஜெயம் மூவிஸ்' என்ற பெயரில் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அவரே தயாரித்து இயக்கப் போகும் இந்த படத்துக்கு 'சசி லலிதா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இது குறித்து ஜெகதீஸ்வர ரெட்டி கூறும்போது, ”ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இப்படத்தில் இருக்கும். சிறு வயதில் ஜெயலலிதா எப்படி இருந்தார்? எப்படி நடிகையாக ஆனார்? அரசியலில் அடியெடுத்து வைத்தது, அதிமுகவில் அவரது பங்களிப்பு, சசிகலாவின் வாழ்க்கை,  அவருடன் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தொடர்பு என்று மக்கள் அறியாத பல விஷயங்களையும் உள்ளடக்கியதாக இப்படம் இருக்கும்.

இவ்வாறு ஜெகதீஸ்வர ரெட்டி கூறியுள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் இன்று வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x