Published : 18 Apr 2019 03:55 PM
Last Updated : 18 Apr 2019 03:55 PM

சூப்பர் டீலக்ஸ் அற்புதம், கண்களுக்கு விருந்து! - இன்ஸ்டாகிராமில் அமலாபால் பதிவு

'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தைப் பாராட்டி அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட வாழ்த்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. ரசிகர்களிடம் கலவையான வரவேற்பையே பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பற்றி நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரிய வாழ்த்துப் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதன் தமிழாக்கம்:

''நான் தாமதம் என்று தெரியும். ஆனால் வரமால் இருப்பதை விட தாமதமாக வரலாம்தானே.

ஒரு வழியாக 'சூப்பர் டீலக்ஸ்' படத்தைப் பார்க்கும் வாய்ப்பு நேற்றிரவு கிடைத்தது. எனக்கு ஒரு விருந்தாக அமைந்தது. இந்த தலைசிறந்த படத்தை ஒரு தூய்மையான கலைப்படைப்பாகத் தான் என்னால் பார்க்க முடிகிறது. ரசிகர்கள் இந்த வழக்கத்துக்கு மாறான படத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்கெனவே சிறந்து விளங்கும் தமிழ்த் துறையில்என்ன மாதிரியான ஒரு அற்புதமான படம். வண்ணங்களையும் பொருட்களையும் வைத்து, வெஸ் ஆண்டர்சன் படங்களைப் போல கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜ இரும்பினால் ஆனவர். என்ன ஒரு அர்ப்பணிப்பு. ஒளிப்பதிவாளர்கள் நீர்வ ஷா மற்றும் வினோத், கலை இயக்குநர் விஜய் ஆதிநாத் எல்லோரும் அவர்களின் சிறந்த பங்களிப்பைத் தந்துள்ளார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக யுவனின் இசை மிகச்சிறப்பு.

ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்னொரு கதாபாத்திரத்தோடு போட்டி போட்டுக்கொண்டு நடிப்பதைப் பார்த்து நாளாகிவிட்டட்து. அட்டகாசம். ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத், காயத்ரி, மிஷ்கின், பக்ஸ் உள்ளிட்ட எல்லோரும் இந்த வருடம் இருக்கும் எல்லா விருதுகளையும் பெறப் போகின்றனர். ஓ, அதுவும் அந்த நான்கு அறிமுக நடிகர்களுக்கு என்ன ஒரு தொடக்கம். தலை வணங்குகிறேன்.

எனக்கு 'சூப்பர் டீலக்ஸ்' ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்தது. உங்களுக்கு எப்படி?

நீங்கள் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றால் இப்போதே டிக்கெட் புக் செய்யுங்கள்'' என்று அமலாபால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x