Published : 09 Apr 2019 08:42 AM
Last Updated : 09 Apr 2019 08:42 AM

திரை விமர்சனம்- குப்பத்து ராஜா

சென்னையில் உள்ள ஒரு குடிசைப் பகுதி மக்களின் அத்தியாவசியப் பிரச் சினைகளைத் தீர்த்து வைக்கும் குப்பத்து ராஜாவாகத் திரிகிறார் பார்த்திபன். அதே பகுதியில் நண்பன் யோகிபாபுவுடன் சேர்ந்து ரவுடித்தனம், ஊர்வம்பு என சுற்றி வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

குப்பத்தில் வசிக்கும் மக்கள், தன் ஒருவன் பேச்சுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும் என நினைக் கும் பார்த்திபனின் செல்வாக்கை அடியோடு சாய்க்க வேண்டும் என ஜி.வி.பிரகாஷ் திட்டமிட்டு வருகிறார். அவ்வப்போது எதிரும் புதிருமாக முறுக்கிக் கொள்கின்ற னர் நாயகனும், பார்த்திபனும்.

இந்நிலையில் ஜி.வி.பிரகா ஷின் தந்தை எம்.எஸ்.பாஸ்கர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். குடிசைவாழ் பகுதி கவுன்சிலர், கதாநாயகி பாலக் லால்வானியின் அம்மா, குப்பத்து ராஜாவாக வரும் பார்த் திபன் ஆகிய மூன்று பேரில் ஒருவர் தான் எம்.எஸ்.பாஸ்கரின் மர்ம மரணத்துக்குக் காரணம் என்கிற கோணத்தில் கதை விரிகிறது.

தன் தந்தையைக் கொன்றது யார் என்பதை ஜி.வி.பிரகாஷ் கண்டுபிடித்தாரா? என்ன நோக் கத்துக்காக எம்.எஸ்.பாஸ்கர் கொலை செய்யப்பட்டார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

நடன இயக்குநரான பாபா பாஸ்கர் இயக்கியுள்ள முதல் திரைப்படம் இது. சென்னை போன்ற பரபரப்பான நகரச் சூழ லில் வெள்ளந்தியாக வாழும் குடிசை வாழ் மனிதர்களின் இயல் பான வாழ்க்கையை பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

குடிசைவாழ் பகுதிக்காக பல கோடி செலவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு படமாக் கப்பட்டுள்ளது. ஊர் நியாயம், ராக்கெட், கை சாமான் இப்படி குப்பத்து மக்களின் பெயர், அவர் களின் பேச்சுமொழி உள்ளிட்ட வற்றில் செலுத்திய கவனத்தை, திரைக்கதை கோர்வையில் செலுத்தவில்லை. இந்த கவனமின் மையே குப்பத்து இயல்பான வாழ்க்கையை பதிவு செய்வதில் இருந்து தடம்மாறி முற்றிலும் செயற்கையான திரைக்கதை நகர்வுக்கு காரணமாகவும் அமை கிறது.

எம்.ஜி.ராஜேந்திரன் என்ற பெய ரில் எம்.ஜி.ஆர் ரசிகனாக வரும் பார்த்திபனின் பாத்திர படைப்பு சற்று ஆறுதலாக இருந்தாலும் தேவையில்லாத இடைச்செருக லாக வரும் பூனம் பஜ்வா, நாயகி பாலக் லால்வானி ஆகியோரின் கதாபாத்திரங்கள் வெறுப்பையே விதைக்கின்றன. அருவருப்பான இரட்டை அர்த்த வசனங்களும் படத்தின் தரத்தை இன்னும் தாழ்த்துகின்றன.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் முன் னேற்றம் இருந்தாலும் அவரது பாத்திரத்தின் தன்மையை இயக் குநர் இன்னும் முழுமையாக பயன்படுத்தியிருக்கலாம். காதல் காட்சிகள், ஏரியாவில் பட்டம் விடுவது, நண்பர்களுடன் சேர்ந்து பார்த்திபனை கவிழ்க்க திட்டம் வகுப்பது உள்ளிட்ட அவரது செயல்பாடுகளில் பெரிதாக சுவாரஸ்யம் இல்லை.

எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத் திரம்தான் கதையோட்டத்தின் மைய இழை. தன் பங்களிப்பை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஏரியா கவுன்சிலராக வரும் டி.ஆர்.கே.கிரண், குப்பத்து பகுதியில் வட்டிக்கு விடும் சேட்டு உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் தற்போதைய குப்பத்து வாழ்க் கையை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கின்றன.

ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார் ரகம்.

குழந்தைகள் சாப்பிடும் மிட்டாயில் போதைப் பொருள் கலந்து சீரழிவை உண்டாக்கும் கும்பலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அவர்களைக் கண்டுபிடிக்க நடக்கும் வியூகம், குப்பத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் நடக்கும் மரணங்கள் என இரண்டாம் பாதி கதையில் விறுவிறுப்பான காட்சிகள் ஆங்காங்கே இருந்தாலும் அதைத் தாங்கி சுமக்கும் முதல் பாதியில் நிறைய குறைகள். அவைதான் படத்தை சோர்வாக்கவும் செய் கின்றன.

காலம்காலமாகப் பார்த்து சலித்துப்போன பழைய குப்பத்து ராஜாவைத்தான் இந்தக் குப்பத்து ராஜாவும் பிரதிபலிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x