Last Updated : 13 Apr, 2019 08:59 PM

 

Published : 13 Apr 2019 08:59 PM
Last Updated : 13 Apr 2019 08:59 PM

அப்பாவுக்குத் தான் ஒட்டு என்று எப்படி சொல்லலாம்? - ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில்

அப்பாவுக்குத் தான் வாக்களிப்பேன் என்று எப்படி சொல்லலாம் என்று கேள்வி எழுப்பிய ரசிகருக்கு ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடங்கி முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார். இந்த மக்களவைத் தேர்தலில் இந்திய குடியரசு கட்சியுடன் (தமிழ்நாடு பிரிவு) கூட்டணி வைத்துள்ளார். 40 தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.

நேற்று (ஏப்ரல் 13) 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்காக கமல் நடித்துள்ள புதிய விளம்பரமொன்றை வெளியிட்டார்கள். இதனை இணையத்தில் பலரும் வரவேற்றுள்ளார். ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சமயத்தில் கமலின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பதிவில், “உங்களை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது அப்பா. மேம்பட்ட எதிர்காலத்துக்காக, சமுதாயத்துக்காக உங்களிடம் ஒரு பார்வை இருக்கிறது.

அதை உங்கள் முயற்சி, ஆர்வம், உண்மை மூலமாக கண்டுள்ளீர்கள். உங்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த அனைவருக்கும், உங்கள் டார்ச் லைட் மூலம் ஒரு பிரகாசமான எதிர்காலம் வர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இப்பதிவுக்கு ட்விட்டரில் ஸ்ருதிஹாசனை பின்தொடர்பவர், “எனது ஒட்டு உங்களுக்குத் தான் எப்படி சொல்லலாம். உறவு என்பதைத் தாண்டி, எந்த வேட்பாளர் சரியானவர் என தேர்வு செய்ய வேண்டும். அது உங்களுடைய அப்பாவாக இருந்தாலுமே” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, “சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவர் எனது அப்பா என்பதால் ஒட்டு இல்லை. அவர் மாற்றத்துக்காக வேலை செய்கிறார் என்பதாலேயே என் வாக்கு” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x