Last Updated : 15 Apr, 2019 12:49 PM

 

Published : 15 Apr 2019 12:49 PM
Last Updated : 15 Apr 2019 12:49 PM

ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகிறது காப்பான்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'காப்பான்' திரைப்படம் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'என்.ஜி.கே' பணிகள் தாமதமானதால், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவான 'காப்பான்' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சூர்யா. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. லண்டனில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. நேற்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட 'காப்பான்' டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இப்படம் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை வருவதால், அதைக் கணக்கிட்டு இந்தத் தேதியை முடிவு செய்துள்ளது படக்குழு.

மோகன்லால், ஆர்யா, பொம்மன் இரானி, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளார். பல்வேறு கெட்டப்களில் சூர்யா டீஸரில் இருப்பதால், என்ன கேரக்டரில் அவர் நடித்துள்ளார் என்பதை யூகிக்க முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x