Published : 26 Apr 2019 09:02 AM
Last Updated : 26 Apr 2019 09:02 AM

நடிப்பு என்றால் சொதப்பல்

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ‘பிலிம் நியூஸ்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக திரைத்துறை சம்பந்தப்பட்ட செய்திகளை கலகலப்பாக வழங்கி வருகிறார்  தொகுப்பாளினி அஞ்சலி.

‘‘ஆரம்பத்தில், ‘பிலிம் நியூஸ்’ நிகழ்ச்சிக்கு நான் ஆடிஷன் போன கதையை சொல்லியே ஆகணும். அங்கு போனதும், சினிமா தொடர்பான 16 செய்திகளை என் கையில் கொடுத்து, ‘தொகுத்து வழங்குங்க.. பாக்கலாம்’னு சொன்னாங்க. அதுவரைக்கும் செய்தி வாசித்த அனுபவம் மட்டுமே இருந்ததால், செமயா சொதப்பிட்டேன். ஆனாலும் என் மேல ரொம்ப நம்பிக்கை வைத்த சேனல் குழுவினர், ‘நீங்க செலக்டட்’னு கூறி, இன்ப அதிர்ச்சி கொடுத்தது மறக்கவே முடியாது. இப்போ கிட்டத்தட்ட 200 எபிஸோட்ஸ் வழங்கியிருப்பேன். நல்ல பாராட்டு கிடைக்குது.

பள்ளித் தேர்வுகளில், நமக்கு நல்லா தெரிஞ்ச கேள்வியை கேட்டா, உற்சாகமாகி, பக்கம் பக்கமா எழுதித் தள்ளுவோம்ல.. அதேபோலதான் செய்றேன். சினிமா தொடர்பான செய்திகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்கிறதால, பல முக்கிய இணையதளங்களில் அலசி, ஆராய்ந்து தொகுத்து வழங்குறேன். அதையும் அழகா என் பாணியில் சொல்றதால, அப்ளாஸ் அள்ளுது!’’ என்றார் அஞ்சலி உற்சாகம் குறையாமல்.

‘‘சினிமா செய்திகளை தொகுத்து வழங்கும் உங்களுக்கு இந்நேரம் சினிமாவில் முகம் காட்டும் ஆசையும் வந்திருக்குமே?’’ என்று கேட்டதற்கு, ‘‘ரெண்டு, மூணு வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா, நமக்கு நடிப்பு எல்லாம் கொஞ்சம்கூட செட் ஆகாதுங்க. கண்டிப்பா சொதப்பிடுவேன்னு எனக்கே தெரியும். அதனால அந்த பக்கம் தலைதிருப்ப வாய்ப்பே இல்லை’’ என்கிறார் அஞ்சலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x