Last Updated : 25 Apr, 2019 04:30 PM

 

Published : 25 Apr 2019 04:30 PM
Last Updated : 25 Apr 2019 04:30 PM

மதயானைக் கூட்டம் இயக்குநர் படத்தில் சாந்தனு

'மதயானைக் கூட்டம்' இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சாந்தனு நடிப்பது உறுதியாகியுள்ளது.

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் தயாரிப்பாளராக அறிமுகமான படம் 'மதயானைக் கூட்டம்'. 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தை, விக்ரம் சுகுமாரன் இயக்கினார்.

விமர்சன ரீதியாக பலரும் கொண்டாடிய படம். ஆனால், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கதிர், ஓவியா, கலையரசன், வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு, ரகுநந்தன் இசையமைத்தார்.

'மதயானைக் கூட்டம்' படத்துக்குப் பிறகு விக்ரம் சுகுமாரன் படமே இயக்காமல் இருந்தார். அடுத்த படம் குறித்த கேள்வியைக் கேட்பவர்களிடம், ‘கதை எழுதி வருகிறேன்’ என்பதையே பதிலாகச் சொல்லி வந்தார்.

தற்போது தனது படத்துக்கான கதையைத் தயார் செய்துவிட்டார். இதில் சாந்தனு நாயகனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இக்கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x