Published : 16 Mar 2019 12:31 PM
Last Updated : 16 Mar 2019 12:31 PM

திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயிஷா இணைந்து நடிக்கும் முதல் படம்

திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயிஷா இருவரும் ‘டெடி’ என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

ஜெயம் ரவி ஜோடியாக ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சயிஷா சைகல். தொடர்ந்து, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜுங்கா’, ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது சூர்யா ஜோடியாக ‘காப்பான்’ படத்தில் நடித்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்தபோது ஆர்யா - சயிஷா இடையே காதல் மலர்ந்தது. கடந்த காதலர் தினத்தன்று இதை ட்விட்டரில் உறுதிப்படுத்தினார் ஆர்யா. இவர்கள் திருமணம் கடந்த 10-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், திருமணத்துப் பிறகு ஆர்யா - சயிஷா இருவரும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ‘டெடி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, சக்தி செளந்தர்ராஜன் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார்.

கடந்த 9-ம் தேதி இந்தப் படத்தின் லோகோ வெளியானது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x