Last Updated : 31 Mar, 2019 11:48 AM

 

Published : 31 Mar 2019 11:48 AM
Last Updated : 31 Mar 2019 11:48 AM

சூப்பர் டீலக்ஸ் படத்தை சாடும் நட்ராஜ்

'சூப்பர் டீலக்ஸ்' படத்தை முன்னணி ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாக பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களும் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த முன்னணி ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

'சூப்பர் டீலக்ஸ்' தாங்க முடியலடா சாமி....ஏன்டா என்ன பிரச்சனை ... அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா?... விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன்

இவ்வாறு நட்ராஜ் தெரிவித்துள்ளார்..

இந்தியில் 'ப்ளாக் ப்ரைடே', 'ஜப் வீ மெட்', 'கோல்மால் ரிட்டன்ஸ்', 'ஹாலிடே', 'புலி' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் 'சதுரங்க வேட்டை', 'என்கிட்ட மோதாதே', 'போங்கு', 'ரிச்சி' உள்ளிட்ட சில படங்களிலும் நாயகனாகவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x