Published : 09 Mar 2019 07:14 PM
Last Updated : 09 Mar 2019 07:14 PM

ஆர்யா - சக்தி செளந்தர்ராஜன் இணையும் டெடி

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவுள்ள படத்துக்கு 'டெடி' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான படம் 'டிக்:டிக்:டிக்'. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, அந்த வருடத்தின் லாபம் அளித்த படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது.

அப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் சக்தி செளந்தர்ராஜன். அக்கதையில் ஆர்யா நடிக்க சம்மதம் தெரிவிக்கவே, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தின் பெயர் மற்றும் லோகோ வடிவமைப்பை இன்று (மார்ச் 9) படக்குழு வெளியிட்டது. 'டெடி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு, டி.இமான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

தற்போது 'காப்பான்', 'மகாமுனி' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஆர்யா. அப்படங்களைத் தொடர்ந்து 'டெடி' படத்தில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x