Published : 17 Sep 2014 09:42 AM
Last Updated : 17 Sep 2014 09:42 AM

மின்வெட்டு பிரச்சினையில் வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?- முதல்வருக்கு வானதி சீனிவாசன் கேள்வி

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட முதல்வர் தயாரா என பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஆர்.நந்தகுமாரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய நேற்று வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

மாநகராட்சி இடைத் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்து ஓட்டு பெறும் முயற்சியில் அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின் றனர். இது குறித்து உரிய ஆதாரங் களுடன் தேர்தல் ஆணையத் திடமும், தேர்தல் நடத்தும் அதிகாரி களிடமும், காவல் துறையினரிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.

தேர்தலில் ஆளும் கட்சியினரின் வன்முறை, மிரட்டல்கள் இருக்கும் என பயந்து வாக்காளர் கள் வாக்களிக்காமல் இருக்க வேண்டாம். மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் என்றாலும் கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்து கிறோம்.

தமிழகத்தில் மின்வெட்டு காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளன. குறிப்பாக, கோவையில் நிலவிய கடுமையான மின்வெட்டு காரணமாக சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழக முதல்வர் உண்மையை மறைக்கிறார். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதல்வர் தயாரா?

மேயர் தேர்தலுக்காக கோவை யில் அமைச்சர்கள் முகாமிட்டு இருப்பதை பார்க்கும்போது கோவை மக்கள் மீது அதிமுக நம்பிக்கை இழந்து விட்டதைக் காட்டுகிறது. பாஜகவை பொறுத்த வரை எந்த உட்கட்சி பூசலும் கிடையாது. அது தொடர்பான தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.

இந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் இல்லாமல் பாஜக வேட்பாளர்களும் ஆளும் கட்சியினரால் பல இடங்களில் மிரட்டப்படுகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பாஜக நிலைப்பாடு தொடர்பாக தமிழக முதல்வர் விமர்சித்தது குறித்து கேட்டபோது, நதிகள் இணைக்கப்பட்டால்தான் நதிநீர் பங்கீட்டு பிரச்சினை முடிவுக்கு வரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x