Last Updated : 08 Mar, 2019 10:23 AM

 

Published : 08 Mar 2019 10:23 AM
Last Updated : 08 Mar 2019 10:23 AM

தீர்ப்புகள் விற்கப்படும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

உறுதுணைக் கதாபாத்திரங்களில் பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். தமிழில் தீரன் இயக்கிய 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்திலும் நடிக்கத் தொடங்கினார். இப்படத்தின் தலைப்பு வெளியான போது, இணையத்தில் சிறு சர்ச்சை உருவானது.

நேற்று (மார்ச் 7) 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்துக்கு ‘கருட வேகா’ தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைக்க, சரத் எடிட் செய்கிறார்.

"உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது இப்படம். சமூக விஷயங்களை உள்ளடக்கிய தரமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும். படத்தின் நாயகன் சமூக நீதியின் போர்வீரன். சத்யராஜ் சார் சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் என்ற ரீதியில் ஒரே தேர்வாக இருந்தார்" என்று இயக்குநர் தீரன் இப்படம் குறித்து தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x