Last Updated : 02 Mar, 2019 07:29 PM

 

Published : 02 Mar 2019 07:29 PM
Last Updated : 02 Mar 2019 07:29 PM

தலைப்பு சர்ச்சையில் தேவராட்டம்

கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள 'தேவராட்டம்' படம் தலைப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதனால் தலைப்பு மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

'கொடிவீரன்' படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தேவராட்டம்'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் அறிவிக்கப்பட்ட போதே, இதன் தலைப்புக்கு சிறு எதிர்ப்பு நிலவியது. தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். அப்போது, 'தேவராட்டம்' என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் நடனம் ஒன்று உள்ளது. ஆகையால், அதை தலைப்பாக வைத்தால் இழிவாக இருக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனை மேற்கொளிட்டு, படத்தின் தலைப்பை மாற்றினால் தான் தணிக்கை பண்ண முடியும் என்று தணிக்கைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால், படக்குழுவோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், படத்தை மறுதணிக்கைக்கு எடுத்துச் சென்றுள்ளது.

மறுதணிக்கைக்கு பிறகே, படத்தின் தலைப்பு மாற்றப்படுகிறதா அல்லது இதே தலைப்பில் வெளியாகிறதா என்பது தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x