Published : 11 Mar 2019 05:51 PM
Last Updated : 11 Mar 2019 05:51 PM

பாடகராக அறிமுகமாகும் ரோபோ சங்கர்

காமெடி நடிகராகக் கலக்கிவரும் ரோபோ சங்கர், தற்போது பாடகராகவும் அறிமுகமாகிறார்.

‘சிவாஜி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த போஸ் வெங்கட், முதன்முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளார். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.

ஸ்ரீராம் கார்த்திக், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, ஹரி சாய் இசையமைக்கிறார். ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹரீஷ் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ஆட்டோ டிரைவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. ஆட்டோ டிரைவராக வாழ்க்கையைத் தொடங்கியவர் போஸ் வெங்கட் என்பதால், அதற்கு மரியாதை செய்யும் வகையில் இந்தப் பாடலை இடம்பெறச் செய்துள்ளார்.

இந்தப் பாடலை, காமெடி நடிகராகக் கலக்கிவரும் ரோபோ சங்கர் பாடியுள்ளார். சாதாரண ஆட்டோ தொழிலாளி பாடுவது போல் அமைந்த இந்தப் பாடலை, ராகம் மற்றும் ஸ்ருதி போன்ற விஷயங்கள் தெரியாத ஒருவர் இதைப் பாடினால்தான் நன்றாக இருக்கும் என்பதாலும், ரோபோ சங்கர் குரல் அதற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதாலும் அவரைப் பாட வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x