Published : 14 Mar 2019 03:59 PM
Last Updated : 14 Mar 2019 03:59 PM

என் முதல் படத்தில் கூட இவ்வளவு டேக் வாங்கியதில்லை: ரம்யா கிருஷ்ணன்

என் முதல் படத்தில் கூட இவ்வளவு டேக் வாங்கியதில்லை என ‘சூப்பர் டீலக்ஸ்’ அனுபவம் பற்றிப் பகிர்ந்து கொண்டுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இம்மாதம் (மார்ச்) 29-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்காக தியாகராஜன் குமாரராஜா, ரம்யா கிருஷ்ணன் இருவரும் வீடியோ பேட்டி அளித்தனர். அப்போது, ‘என்னுடன் பணிபுரிந்த சமயத்தில், நீங்கள் கடினமாக உணர்ந்தது எப்போது?’ எனக் கேட்டார் தியாகராஜன் குமாரராஜா.

அதற்குப் பதிலளித்த ரம்யா கிருஷ்ணன், “என் வாழ்க்கையிலேயே இத்தனை டேக்குகள் வாங்கியதில்லை. இதன்பிறகும் இத்தனை டேக்குகள் வாங்குவேனா என்று தெரியாது. என் முதல் படத்தில் கூட இவ்வளவு டேக் வாங்கியதில்லை” என்றவர் கேமரா பக்கம் திரும்பி, “முதலில் இவர் (தியாகராஜன் குமாரராஜா) என்னைச் சந்திக்க பெங்களூரு வந்தார். அப்போது நான் மிகவும் கூலாக, ‘என்னுடைய முதல் ஷாட் எப்போதும் சிறந்ததாக இருக்க வேண்டும்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘கண்டிப்பாக, முயற்சி செய்யலாம்...’ என்று கூறினார்.

அப்போது என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியாது. முதல் ஷாட் 37 டேக்குகள் எடுக்கப்பட்டது. அதற்கு முன்பு விஜய் சேதுபதி என்னுடைய வேனுக்கு வந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, தனக்கு 80 டேக்குகள் தேவைப்பட்டது என்று கூறினார். அப்போது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்று மாலை என்னுடைய ஷூட்டிங் தொடங்கியபோதுதான் தெரிந்தது அவர் கூறிய 80 டேக்குகள் பற்றி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x