Published : 29 Mar 2019 08:10 AM
Last Updated : 29 Mar 2019 08:10 AM

நெசவுக் கலையின் மரபு

‘கலர்ஸ்’ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடர் ‘தறி’. 

பட்டு இழையின் பாரம்பரியத்தை சின்னத்திரை வழியே தாங்கி வரும் இந்தத் தொடர் அன்னம் (ஸ்ரீநிதி) என்ற கதாபாத்திரத்தின் வழியாக சொல்லப்படுகிறது. நொடித்துப்போன ஒரு நெசவாளர் குடும்பத்தின் போராட்டங்களையும், மெல்ல மெல்ல மறைந்து வருகிற பாரம்பரிய நெசவுக் கலைக்கு புத்துயிரூட்டுவதற்கான தொடராக இது அமையும் என்கிறார்கள் சேனல் தரப்பினர். 

‘‘காஞ்சிபுரம் நகர் உலகளாவிய அங்கீகாரங்களை தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. அதில் பட்டுத் தொழிலில் இரவும் பகலும் அயராது பாடுபட்ட பல தலைமுறைகளைச் சேர்ந்த நெசவாளிகளின் பங்கு அதிகம்” என்கிறார் ‘தறி’ நெடுந்தொடரின் இயக்குநர் சக்திவேல்.

 அவர் இதுகுறித்து மேலும் பேசும்போது, “நெசவாளர் சமூகத்தின் உண்மையான சாரத்தையும் மற்றும் அவர்களது சவால்களையும் இந்தத் தொடர்வழியே படம் பிடித்திருக் கிறோம். இந்தக் கதையின் வழியாக நெசவுக் கலை மீது மக்களது கவனமும், அக்கறையும் திரும்பும் என்று உறுதியாக நம்புகிறோம். பாரம்பரியமான நெசவுத் தொழிலைப் பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்துவதில் இந்தத் தொடர் ஒரு வினையூக்கியாக இருக்கும்!” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x