Published : 29 Mar 2019 08:11 AM
Last Updated : 29 Mar 2019 08:11 AM

ப்ரீத்தாவின் ஃபேஷன்!

'வேந்தர்' தொலைக்காட்சிக்காக ‘வேர்ல்டு ரவுண்ட் அப்’,  ‘ஹலோ டாக்டர்’  மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் என பரபரப்பாக சுற்றி வருகிறார் தொகுப்பாளினி ப்ரீத்தா.

‘‘இன்ஜினீயரிங் படித்துவிட்டு கல்லூரி ஆசிரியை பணியைத்தான் தேர்வு செய்தேன்.  துணிச்சலாக பேசுவது, பொது விஷயங்களில் ஈடுபாடு உள்ளிட்ட எனது குணங்கள்தான்,  தொகுப்பாளினி அவதாரத்தை கையில் எடுக்க வைத்தது. மக்கள் டி.வி, கேப்டன் டி.வி என்று படர்ந்து இப்போது, கடந்த 5 வருஷங்களுக்கும் மேல் வேந்தர் டி.வி-யில் பயணிக்கிறேன். பொழுதுபோக்கு விஷயங்களைத் தொகுத்து வழங்குவதை காட்டிலும் கல்வி, மருத்துவம், கலை என மக்களுக்கு பெரிதும் பயனுள்ள விஷயங்களை நிகழ்ச்சி வழியே கொடுக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.  ‘ஹலோ டாக்டர்’, ‘வேர்ல்டு ரவுண்ட் அப்’ மாதிரியான  நிகழ்ச்சிகளுக்குத்தான்  தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பேன்!’’ என்கிறார் ப்ரீத்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x