Published : 21 Mar 2019 05:21 PM
Last Updated : 21 Mar 2019 05:21 PM

மனதில் இருக்கும் மிருகத்தோலை உரியுங்கள்: பொள்ளாச்சி கொடூரம் குறித்து வைரமுத்து கருத்து

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

'நெடுநல்வாடை' படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, ''பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் அறத் தூக்கத்தைக் கெடுக்கிறது.

பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா? இதற்கான அடிப்படைக் காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்தத்தான் கலை. அந்தக் கலையால் பண்படாத பைத்தியங்கள்தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள்.

இந்த மனநோய்களைத் தயாரிப்பதில் இந்தச் சமூகத்துக்குரிய பங்கு என்ன? நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்க வேண்டும். அதைத்தான் கலை செய்கிறது'' என்றார் வைரமுத்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x