Published : 08 Mar 2019 08:39 am

Updated : 08 Mar 2019 08:39 am

 

Published : 08 Mar 2019 08:39 AM
Last Updated : 08 Mar 2019 08:39 AM

தொகுப்பாளினியாக உயரம் தொடணும்!

வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’சினிமா 360’ நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கி வரும் தொகுப்பாளினி ப்ரீத்தி சுரேஷ் ஆடிட்டிங் துறையிலும் சகலகலா வல்லவி.

‘‘சின்ன வயதில் இருந்தே எனக்கும் சினிமா மீது தீராத ஆசை. அதைத் தொடர்ந்து டி.வி சீரியல்கள் மீதும் விருப்பம் வந்தது. நாம் ஆசைப்பட்ட எல்லாமுமா நிறைவேறிவிடுகிறது? அந்த ஆசைகளை எல்லாம் இப்போது ஓரம்கட்டிவிட்டு முழு நேர தொகுப்பாளினியாக உருவெடுத்துவிட்டேன். அதுதான் இப்போது எனது ஒரே அடையாளம்.

4 ஆண்டுகளாக இந்தச் சேனலில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறேன். எல்லாமும் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்றாலும் அதையும் சுவைபட செய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கம். டிராவலிலேயே நிறைய சாதிக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் இந்த தொகுப்பாளர் பயணம் என்பது வித்தியாசமானதாகவும் சுகமானதாகவும் இருக்கிறது’’ என்கிற ப்ரீத்தி சுரேஷ், பிறந்து வளர்ந்தது சென்னை. எத்திராஜ் கல்லூரியில் ஆடிட்டிங் படிப்பு படித்தவர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x