Last Updated : 01 Mar, 2019 05:23 PM

 

Published : 01 Mar 2019 05:23 PM
Last Updated : 01 Mar 2019 05:23 PM

கிருமி இயக்குநரின் அடுத்த படம் பன்னிக்குட்டி

'கிருமி' இயக்குர் அனுசரண் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்துக்கு 'பன்னிக்குட்டி' என்று பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு

கதிர், ரேஷ்மி மேனன், சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கிருமி'. இப்படத்தின் இயக்குநர், எடிட்டர் அனுசரண். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது 'கிருமி'

2015-ம் ஆண்டு வெளியான இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து அவருடைய படங்களில் பணிபுரிந்து வந்தார். தற்போது, தனது அடுத்த படத்தை சத்தமின்றி இயக்கியுள்ளார் அனுசரண். இப்படத்துக்கு கதையை ரவி முருகையனும், திரைக்கதையை மணிகண்டன், அனுசரண் மற்றும் ரவிமுருகையனும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு 'பன்னிக்குட்டி' என்று பெயரிட்டுள்ளனர். கருணாகரன் , யோகி பாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , டி.பி.கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'ஆண்டவன் கட்டளை', 'கிருமி' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கே இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக சதிஷ் முருகன், கலை இயக்குநராக சுகுமாரன் பணிபுரிந்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பிப்ரவரி 28-ம் தேதி 'பன்னிக்குட்டி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இதில் வெள்ளை பன்னிக்குட்டி ஒன்று பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x