Published : 22 Mar 2019 01:47 PM
Last Updated : 22 Mar 2019 01:47 PM

பிஎம் நரேந்திர மோடி பட ட்ரெய்லரை மறைமுகமாகக் கிண்டலடித்த சி.எஸ்.அமுதன்

அண்மையில் வெளியாகியுள்ள 'பிஎம் நரேந்திர மோடி' படத்தின் ட்ரெய்லரை 'தமிழ்ப் படம்' திரைப்பட இயக்குநர் சிஎஸ்.அமுதன்  மறைமுகமாகக் கிண்டலடித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக  வைத்து எடுக்கப்பட்ட படம்  'பிஎம் நரேந்திர மோடி'. சந்தீப் சிங் தயாரிப்பில், ஒமுங் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. சாதாரண டீ விற்பவராக இருந்த மோடி, இந்தியாவின் பிரதமராக எப்படி ஆனார் என்பது இப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இதில், மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் குறித்துக் தமிழ்ப் படக் கதாநாயகர்களைச் சகட்டுமேனிக்குப் பகடி செய்த 'தமிழ்ப் படம்' திரைப்படத்தின் இயக்குநர் சி.எஸ். அமுதன் கிண்டல் அடித்துள்ளார்.

இதுதொடர்பாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''அன்புத் தயாரிப்பாளரே ('தமிழ்ப்படம்' திரைப்படத் தயாரிப்பாளர்) 'பிஎம் நரேந்திர மோடி' படத்தைவிட சிறப்பாக என்னால் படம் எடுக்க முடியாது. உங்களுக்கு 'தமிழ்ப் படம்' 3-ம் பாகத்தின் இயக்குநர் கிடைத்துவிட்டார். வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கடந்த ஜனவரியில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெளியிட்டார். 23 இந்திய மொழிகளில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x