Published : 18 Feb 2019 03:04 PM
Last Updated : 18 Feb 2019 03:04 PM

அசுரன் அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் பசுபதி ஒப்பந்தம்

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் 'அசுரன்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பசுபதி நடித்து வருகிறார்.

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி 'வடசென்னை 2' படத்துக்கு முன்பாக 'அசுரன்' என்ற படத்தில் இணைந்து பணிபுரிந்து வருகிறது. இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார். முதற்கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

மஞ்சு வாரியர் நாயகியாக நடித்து வருகிறார். அவர் தமிழில் நடிக்கும் முதல் படமாக 'அசுரன்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென் கருணாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதில் பாலாஜி சக்திவேல் வில்லத்தனம் கலந்த காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, முக்கியக் கதாபாத்திரத்தில் பசுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

இப்படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். 'அசுரன்' படத்தைத் தொடர்ந்து சத்யஜோதி தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x