Published : 22 Feb 2019 03:05 PM
Last Updated : 22 Feb 2019 03:05 PM

நல்லதுன்னா அது போதுமே!

‘புதுயுகம்’   சேனலில்  ‘மார்னிங் கஃபே’  நிகழ்ச்சி  வழியே  வெளிச்சம்  பெற்றவர்  தர்ஷிக்கா.  சமீப காலமாக இவருக்கு   ஜிகு ஜிகு  சினிமா, மகா மெகா சீரியல்கள் பக்கமும்  தலை காட்டும் ஆர்வ அலையடிக்க ஆரம்பித்திருக்கிறது.

‘‘நமது  ஆர்வமும், தாக்கமும் எதில்  கூடுதலாக உள்ளதோ,  அந்தப்  பக்கத்தில்  கவனம் செலுத்தினால்தான்  ‘தி  பெஸ்ட்’ என்று பெயர் வாங்க முடியும். என்னால் எல்லாம்   ஒரு ஆபீஸுக்குப் போய்,  ஒரே இடத்தில்  உட்கார்ந்து வேலை பார்க்கிற பொறுமையெல்லாம் கிடையாது.  அது மாதிரியான மனநிலையில் என்னை எப்போதும் நான் பொருத்திப் பார்ப்பதே இல்லை.  அதனால்தான்  இன்ஜினீயரிங் படிப்பை  முடித்த கையோடு  மீடியா பக்கம் ஓடி வந்துவிட்டேன். தொகுப்பாளர் ரியோ சீரியல், சினிமா  என்று  தாவியதற்கு  பிறகு சன் மியூசிக்ல ‘ஃப்ரியா  விடு’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்தேன். அங்கே இருந்து மும்பை தமிழ் சேனலில்   ‘பயண நிகழ்ச்சிகள்’  என்று  கொஞ்ச நாட்கள்  ஓடியது. மீண்டும் சொந்த ஊரான சென்னைக்கே இப்போது வந்துவிட்டேன்.    ‘மார்னிங் கஃபே’  நிகழ்ச்சி வழியாக  நேயர்களுக்கு நல்ல நல்ல தகவல்களை கொடுப்பதன்   மூலமா நாமும்  நாலு நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள  முடியுதே என்பதில் பெரும்  சந்தோஷம்’’ என்றவர் தொடர்ந்து ‘‘எனக்கு இரண்டு படங்கள் ஒப்பந்தமானது.  ஆனால்  என்னுடைய மனசுக்கு பிடித்த மாதிரி சீரியல்தான் இன்னும் அமையலை.  ஹீரோயின் தோழி, ஹீரோவுக்கு தங்கை  என்று  யாராவது கதை சொல்ல வந்தால்,  அந்த மாதிரி  கேரக்டர்லேயும் நல்ல ஸ்கோப் இருக்குமே, அதில்  என்னுடைய  கதாபாத்திரம் என்ன மாதிரி  இருக்கும் என்று விளக்குங்கள்?’  என்று  சொல்லி கதை  கேட்டுக் கொண்டிருக்கிறேன்!’’ என்கிறார், தர்ஷிக்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x