Last Updated : 21 Feb, 2019 05:24 PM

 

Published : 21 Feb 2019 05:24 PM
Last Updated : 21 Feb 2019 05:24 PM

மார்ச் 29-ம் தேதி வெளியாகிறது சூப்பர் டீலக்ஸ்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் மார்ச் 29-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

'ஆரண்ய காண்டம்' படத்தைத் தொடர்ந்து, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விஜய்சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், ஃபகத் பாசில், சமந்தா, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு முன்பே முடிந்து, இறுதிகட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. இதில் விஜய்சேதுபதி திருநங்கையாகவும், மிஷ்கின் பூசாரியாகவும், ரம்யா கிருஷ்ணன் ஆபாசபட நடிகையாகவும் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் உரிமையை சசிகாந்த் தனது நண்பர்களுடன் இணைந்து தொடங்கியுள்ள 'YNOTX' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விநியோக உரிமையை விற்பனையாகிவிட்டதைத் தொடர்ந்து, படத்தை எப்போது வெளியிடலாம் என்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் மார்ச் 29-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்து, படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (பிப்.21) வெளியாகும் என்று படக்குழுவினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பு இடையே படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளதால், பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x