Published : 12 Feb 2019 11:22 AM
Last Updated : 12 Feb 2019 11:22 AM

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தல்: பி.சி.ஸ்ரீராம் அணியினர் வெற்றி

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை  நடைபெறும். 2019-2021 ஆண்டுக்கான நிர்வாகிகள் பொறுப்புக்கான தேர்தல், தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்க வளாகத்தில் பிப்ரவரி 10-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது.

அன்றைய தினமுமே வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நள்ளிரவு 12 மணி அளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன. தேர்தல் அதிகாரிகளாக கவிஞர் பிறைசூடன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் கே.வி. கன்னியப்பன், முனீர் அகமது, கஸ்தூரி மூர்த்தி கொண்ட நால்வர் குழு தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

இதில் பி.சி.ஸ்ரீராம் அணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தார்கள். அதன்படி தலைவராக பி.சி.ஸ்ரீராம், துணைத் தலைவர்களாக கார்த்திக் ராஜா, எஸ்.சரவணன், பொதுச்செயலாளராக பி.கண்ணன், துணை செயலாளர்களாக எம்.இளவரசு, ஆரோக்கியதாஸ், யு.கே.செந்தில்குமார், பொருளாளராக பி.பாலமுருகன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

செயற்குழு உறுப்பினர்களாக அஜயன் வின்சென்ட், என்.கே. ஏகாம்பரம், என்.அழகப்பன், டி.கண்ணன், கே.ரவிஷங்கரன், ஜே.லஷ்மண் குமார், ஜே.ஸ்ரீதர், எம்.வெற்றிவேல், ஏ.வினோத் பாரதி, எஸ்.ஆர்ம்ஸ்ட்ராங், வி.இளம்பருதி, பி.காசிநாதன், ஜி.முருகன், சி.தண்டபாணி மற்றும் எஸ்.அருண்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர்கள் பதவிக்கு மூவருமே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற அனைவருமே, அதற்கான சான்றிதழ்களை தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x