Published : 16 Feb 2019 11:34 AM
Last Updated : 16 Feb 2019 11:34 AM

டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறிய சிம்புவின் தம்பி

டி.ராஜேந்தரின் இளைய மகனும், சிம்புவின் சகோதரருமான குறளரசன் தன் பெற்றோர் முன்னிலையில் இன்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய 'சொன்னால்தான் காதலா', 'காதல் அழிவதில்லை' உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக நடித்தவர் குறளரசன். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான 'இது நம்ம ஆளு' படத்திற்கு இசையமைத்த குறளரசன் அதற்குப் பிறகு சினிமாவில் அதிக கவனம் செலுத்தவில்லை.

இந்நிலையில் தன் பெற்றோர் டி.ராஜேந்தர் - உஷா முன்னிலையின் குறளரசன் இன்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

குறளரசன் இஸ்லாம் குருமார்கள் அருகில் அமர்ந்த படி இஸ்லாம் மதத்தை ஏற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சிம்பு சிவ பக்தர். சிம்புவின் சகோதரி கிறித்தவ மதத்தைப் பின்பற்றுகிறார். சிம்புவின் சகோதரர் குறளரசன் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

இதுகுறித்து டி.ராஜேந்தர் கூறும் போது, "எம் மதமும் சம்மதம் என்ற கொள்கையை கடைப்பிடிப்பவன் நான். குறளரசன் இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார். என் மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்துள்ளேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x