Last Updated : 21 Feb, 2019 09:41 PM

 

Published : 21 Feb 2019 09:41 PM
Last Updated : 21 Feb 2019 09:41 PM

ஜூனில் தொடங்கும் தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் படம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, நவாசுதீன் சித்தக்கி, விஜய்சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி படத்தையே இயக்குவார் கார்த்திக் சுப்பராஜ் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், தன் அடுத்த படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் எந்தவொரு தகவலையுமே வெளியிடாமல் இருந்தார்.

தற்போது அவரது அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 'பேட்ட' படத்துக்கு முன்பாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ். அப்படத்தை இப்போது ஓய் நாட்  ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது.

இதற்கான முதற்கட்ட பணிகளில் தான் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதில் தனுஷ் உடன் பல்வேறு ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கவுள்ளனர். இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x