Published : 19 Feb 2019 09:34 AM
Last Updated : 19 Feb 2019 09:34 AM

அமெரிக்காவில் முடியும் ‘காப்பான்’

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவர உள்ள ‘என்.ஜி.கே’ படத்தின் டீசருக்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு இடையே தற்போது சூர்யா முழு மூச்சாக ‘காப்பான்’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சென்னையில் இப்படத்துக்காக  கிளப் பின்னணி பாடல் படப்பிடிப்பு, கிழக்கு கடற்கரைச் சாலையில் முக்கிய காட்சிகள் என வளர்ந்து வரும் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது.   பாடல் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து படமாக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்த்  முந்தையப் படங்களைப் போலவே இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பையும் பாடலுடன் முடிக்க திட்டமிட்டிருக்கிறார். தற்போது நடந்துவரும் சென்னை படப்பிடிப்பை முடித்துக்கொண்டு விரைவில் படக்குழு  அமெரிக்கா புறப்பட உள்ளது. அங்கே  சூர்யா,  சாயிஷா உள்ளிட்ட குழுவினரது பாடலை  முடித்துக்கொண்டு  படத்துக்கு ‘பேக் - அப்’ சொல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x