Published : 16 Feb 2019 12:20 PM
Last Updated : 16 Feb 2019 12:20 PM

கடல் சாகசங்கள் நிறைந்த சிம்ரன் - த்ரிஷா படம்

சிம்ரன் - த்ரிஷா இருவரும் நடிக்கவுள்ள படம், கடல் சாகசங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகவுள்ளது

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் '96'. அப்படத்தைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களும், த்ரிஷாவை தங்களுடைய படத்தில் நடிக்க வைக்க அணுகினர்.

ஆனால், பல்வேறு கதைகளைக் கேட்டாலும் தனது அடுத்த படத்தை மிக கவனமாக தேர்வு செய்ய நினைத்தார் த்ரிஷா. ஆகையால், நீண்ட நாட்கள் கழித்து தற்போது சுமந்த் ராதாகிருஷ்ணன் கதை மிகவும் பிடித்துவிடவே, நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இவர் 'சதுரம்' என்ற படத்தை இயக்கியவர்.

இப்படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து சிம்ரனும் நடிக்கவுள்ளார். இதில் சிம்ரன், த்ரிஷா இருவருமே அக்கா - தங்கையாக நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன், "கடலுக்கு அடியில் சாகசங்களும், சண்டைக் காட்சிகளும் நிறைந்த படமாக இது இருக்கும். இன்னும் இப்படத்துக்குப் பெயரிடப்படவில்லை. மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும். தற்போது த்ரிஷா - சிம்ரன் இருவருக்குமே கடல் சார்ந்த சாகசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தை சென்னை, பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x