Published : 19 Jan 2019 03:22 PM
Last Updated : 19 Jan 2019 03:22 PM

சிவகார்த்திகேயனின் புதுப்படம்: பிப்ரவரியில் ஷூட்டிங் தொடக்கம்

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங், அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சீமராஜா’. பொன்ராம் இயக்கிய இந்தப் படத்தில் ஹீரோயினாக சமந்தா நடித்தார். சிம்ரன், நெப்போலியன், சூரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். டி.இமான் இசையமைத்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தான் முதன்முதலாகத் தயாரித்த ‘கனா’ படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக சிறிய வேடத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். அருண்ராஜா காமராஜ் இயக்கிய இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடித்தார்.

தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க இருக்கிறது. ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கோட்டபாடி ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x