Published : 14 Jan 2019 05:59 PM
Last Updated : 14 Jan 2019 05:59 PM

ராமின் ‘பேரன்பு’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

ராம் இயக்கியுள்ள ‘பேரன்பு’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேரன்பு’. மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர், வடிவுக்கரசி, லிவிங்ஸ்டன், சமுத்திரக்கனி, அருள்தாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளி மகளுக்கும், அந்தக் குழந்தையின் தந்தைக்குமான பாசப் பிணைப்பை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. படம் ரிலீஸுக்குத் தயாரானாலும், சரியான வெளியீட்டுத் தேதி கிடைக்காததால் வெளியிடப்படவில்லை. அதேசமயம், உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைக் குவித்தது.

இந்நிலையில், வருகிற பிப்ரவரி முதல் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் மேனன் இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ மற்றும் சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கண்ணே கலைமானே’ ஆகிய படங்களும் பிப்ரவரி முதல் தேதி ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x