Published : 14 Jan 2019 02:56 PM
Last Updated : 14 Jan 2019 02:56 PM

தவறாமல் தியேட்டருக்கு வந்து பாருங்க: விஜய் சேதுபதி ட்வீட்

தவறாமல் தியேட்டருக்கு வந்து பாருங்க என ‘கண்ணே கலைமானே’ படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் விஜய் சேதுபதி.

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப், ஹாஜி ஷென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் இசை உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. வருகிற பிப்ரவரி முதல் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த விஜய் சேதுபதி, ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

“இப்போதான் ‘கண்ணே கலைமானே’ படம் பார்த்தேன். காதலையும் பெண்மையையும், அழகாகவும் ஆழமாகவும் காட்சியுள்ளார் சீனு ராமசாமி சார். உதயநிதி ஸ்டாலின், யுவன் சங்கர் ராஜா, தமன்னா அனைவருக்கும் வாழ்த்துகள். தவறாமல் தியேட்டருக்கு வந்து பாருங்க. நல்ல அனுபவமா இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஹீரோயினாக காயத்ரி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது.

— VijaySethupathi (@VijaySethuOffl) January 12, 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x