Last Updated : 11 Jan, 2019 09:20 PM

 

Published : 11 Jan 2019 09:20 PM
Last Updated : 11 Jan 2019 09:20 PM

தொலைக்காட்சி ஒளிபரப்பில் சீமராஜா பெரும் சாதனை

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'சீமராஜா', தொலைக்காட்சி ஒளிபரப்பில் பெரும் சாதனை புரிந்துள்ளது.

2018-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி வெளியான படம் 'சீமராஜா'. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நெப்போலியன், சமந்தா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார்.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால், படக்குழுவினர் பெரும் ஆச்சர்யமடைந்தனர். இப்படத்துக்கு ஏன் ஈசல் மாதிரி விமர்சனம் பண்ண இவ்வளவு பேர் என்று நடிகர் சூரியும் கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில், ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினச் சிறப்பு திரைப்படமாக 'சீமராஜா' படத்தை ஒளிபரப்பியது சன் தொலைக்காட்சி. இதில் பெரும் சாதனையை புரிந்துள்ளது 'சீமராஜா'

அப்படத்தின்  TVR (டெலிவிஷன் ரேட்டிங்) தமிழகத்தில் 21.52 புள்ளிகள். அப்படத்திற்கு அந்த வாரத்துக்கான மொத்த பார்வை எண்ணிக்கை 1,67,66,000. புத்தாண்டு தினத்தன்று ஒளிபரப்பப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளில் இந்திய அளவில் சீமராஜா 22.02 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை வென்றது.

தொலைக்காட்சி ஒளிபரப்பில் இது மிகப்பெரிய சாதனை என்பதால், 'சீமராஜா' படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x