Published : 05 Jan 2019 04:55 PM
Last Updated : 05 Jan 2019 04:55 PM

நரேந்திர மோடி வேடத்தில் நடிக்கும் அஜித் வில்லன்

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நரேந்திர மோடி வேடத்தில் நடிக்கிறார்.

அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். தெலுங்கில் இவர் நடித்த ‘வினய விதேய ராமா’ படம், வருகிற 11-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதில், ஹீரோவாக ராம் சரண் நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘பிஎம் நரேந்திர மோடி’ படத்தில், மோடி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விவேக் ஓபராய். சந்தீப் சிங் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தை ஒமுங் குமார் இயக்குகிறார். பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் வாழ்க்கை வரலாற்றை இயக்கி, தேசிய விருது பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 மாதங்களாக திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வருகிற 7-ம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார். 23 இந்திய மொழிகளில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படுகிறது.

சாதாரண டீ விற்பவராக இருந்த மோடி, இந்தியாவின் பிரதமராக எப்படி ஆனார் என்பது இந்தப் படத்தில் சொல்லப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x