Last Updated : 04 Jan, 2019 06:14 PM

 

Published : 04 Jan 2019 06:14 PM
Last Updated : 04 Jan 2019 06:14 PM

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப்பில் பேட்ட விளம்பரங்கள்: படக்குழுவினரின் புதிய முயற்சி

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கில் GIF வடிவில் 'பேட்ட' படத்தின் விளம்பரங்களைத் தொடங்கியுள்ளது படக்குழு.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 10-ம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. சன் நிறுவனம் சம்பந்தப்பட்ட அனைத்து சேனல்களிலும் இதன் விளம்பரங்களை ஒளிபரப்பத் தொடங்கிவிட்டார்கள்.

தற்போது சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப்களில் 'பேட்ட' விளம்பரங்கள் வரத் தொடங்கியுள்ளன. ட்ரெய்லரில் ரஜினி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ரஜினியின் ஸ்டைல்கள் அனைத்தையும் GIF வடிவில் வெளியிட்டுள்ளது.

இதனை தங்களுடைய ஸ்டேட்ஸ்கள், கமெண்ட்கள் மூலம் வெளியிட்டு ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தென்னிந்திய சினிமாக்களில் இது முதன்முறை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதன் மூலம் சமூக வலைதளத்தில் 'பேட்ட' படக்குழுவினரின் விளம்பர யுக்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'பேட்ட'  ட்ரெய்லர், டீஸர் மற்றும் பாடல்கள் என யாவுமே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது திரையரங்க ஒப்பந்தங்களைத் தொடங்கி நடத்தி வருகிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.

'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, நவாசுதின் சித்திக், விஜய் சேதுபதி, சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x