Last Updated : 31 Jan, 2019 08:47 PM

 

Published : 31 Jan 2019 08:47 PM
Last Updated : 31 Jan 2019 08:47 PM

படப்பிடிப்பு தளத்தில் விஜய்சேதுபதி செய்யும் உதவி: வைரலாகும் வீடியோ

'மாமனிதன்' படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி உதவி செய்யும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

'சிந்துபாத்' படத்தைத் தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகும் 'மாமனிதன்' படத்தில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து வருகிறார். காயத்ரி, அனைகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தேனியில் நடைபெற்றது. தற்போது கேரளாவில் சில முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறது படக்குழு. இதன் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர கூட்டம் கூடியுள்ளது.

அதற்கிடையில் வயதான பெண்மணி ஒருவர் விஜய்சேதுபதியிடம் உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். படப்பிடிப்பு தளம் என்பதால் கையில் உடனடியாக அவரிடம் பணமில்லாமல் போயுள்ளது. உடனடியாக தனது உதவியாளர்களின் பர்ஸ்களை வாங்கி அதிலிருந்த பணத்தை எடுத்து அப்பெண்மணியிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

இந்த உதவியை படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள், வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இதே போன்று விஜய்சேதுபதி செய்யும் பல உதவிகள் வெளியே தெரிவதில்லை. இதுவே, படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒருவர் எடுத்த வீடியோவாக தெரிகிறது.

'மாமனிதன்' படத்தைத் தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய்சேதுபதி. இதில் ராஷிகண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x