Published : 15 Jan 2019 05:29 PM
Last Updated : 15 Jan 2019 05:29 PM

ஜீ.வி.பிரகாஷ் சகோதரியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்?

பெயரிடப்படாத படம் ஒன்றில் ஜீ.வி.பிரகாஷ் சகோதரியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார் எனத் தகவல் கிடைத்துள்ளது.

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். மணிரத்னத்திடம் அசோஸியேட்டாகப் பணிபுரிந்த தனசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு மட்டுமின்றி, தனசேகரனோடு இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார் மணிரத்னம். ‘96’படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால், ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக இல்லை, அவரின் சகோதரியாக நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, ஜீ.வி.பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடிப்பவர்கள் யார் என்ற விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். அதைத் தொடர்ந்து மறுபடியும் மணிரத்னம் தயாரிப்பில் நடிக்கிறார். விரைவில் இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x